Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, October 13, 2011

Ratna cafe, velachery. My experience

சாப்பிட போற நமக்கு என்ன வேணும். தரம், சுவை, சரியான அளவு, சுத்தம், சேவை.

இதுல சுவை மத்த சுமாரான உணவகங்கள்ல இருக்கிற மாதிரி தான் இருக்கும். மத்த எதாச்சும் அந்த ரத்னா கபே'ல இருக்கானு போய் பாருங்க.

தரம் பத்தி தெரிஞ்சுக்க ஆசை பட்டீங்கனா அங்க சாம்பார் இட்லினு ஒன்னு இருக்கும். அதை சாப்பிட்டு பாருங்க. எங்க இருந்து பருப்பு வாங்கிட்டு வந்து போடுறாங்கனு தெரியல. அவ்ளோ குப்பை (பருப்பு தோல்) இருக்கும் அதுல.

சரியான அளவு இருக்குமா.?? கிடையாது.

ரத்னா கபே'ல ஒரு ப்ளேட் இட்லி சாப்பிடறதுக்கு ஒரு டம்பளர் தண்ணி குடிச்சிட்டு சும்மா இருக்கலாம்.
ஒரு ப்ளேட் இட்லி ருபாய் 22.50 

அந்த கேடு கெட்ட இட்லி புகைப்படம் கீழே பார்க்க

.


இவ்ளோ மெல்லிசா இட்லி போடா எங்க கத்துகிட்டாங்கனு  தெரில. இதுக்கு விலை 22.50 .  அங்க புகார் செஞ்சா, இவ்ளோ தாங்க அளவுனு பதில். நம்ம ஆளுங்க என்னைக்கு மதிச்சு பதில் பேசி இருக்காங்க. இது நமக்கு தேவை தானா.

சுத்தம், சேவை. இரண்டுமே அங்க கிடையாது. கரப்பான் பூச்சி, கொசு, இ, இதெல்லாம் சகஜம். 

எந்த உணவகங்கள்ல இதெல்லாம் இல்லாம இருக்குனு யோசிக்கிறீங்களா.

அஞ்சு ரூபாய்க்கு 2 இட்லி தர ரோட்டோர கடைல சுத்தம் எதிர் பாக்குறது நியாயம் இல்ல. இட்லி ருபாய் 22.50 கொடுத்து சாப்பிடும் போது இதெல்லாம் கண்டிப்பா பாக்கணும்.

வேலைக்கு வட மாநிலங்கள்ல இருந்து ஆளுங்கள கூட்டிட்டு வந்து வச்சி இருக்காங்க. வெறும் கை வச்சி தான் எல்லா பொருளையும் தட்டுல எடுத்து வச்சி கொண்டு வராங்க. கொஞ்சமாச்சும் யோசிங்க. நீங்க சாப்பிடற பொருளை ஒரு மூன்றாம் மனிதர் கை வைத்து கொடுக்கிறது எவ்வளவு அருவருப்பான விஷயம்.

---end--

Saturday, October 1, 2011

கார் கத்துக்க போறேனுங்கோ

இப்ப கார் ஓட்ட கத்துக்கணும்னு பிளான் போட்டாச்சு. அடுத்ததா மனசுல ஓட ஆரம்பிக்கிற விஷயம் ...

நம்மனால முடியுமா 

ரெண்டு சக்கர வண்டி நா சின்னது, பூந்து பூந்து போய்டலாம். நாலு சக்கர வண்டி நா அளவுல பெருசு. பெப்பரகேனு இருக்கும். 

இவ்ளோ நெரிசல்ல எப்பிடி ஒட்டிட்டு போறது.

ஸ்டீரிங்க புடிக்கணும்,

கியர போடணும்,

அச்செலேரடேற மிதிக்கணும்,

பிரேக்க போடணும்,

கிளட்ச போடணும்,

யப்பா யப்பா. இவ்ளோ கஷ்டபட்டு இத ஒட்டி தொலையனுமானு தோணும்.

இந்த குழப்பத்துல டிப்ஸ் கேக்கலாம்னு அக்கம் பக்கம் கேட்டா அவங்க எடுத்து விடுவாங்க பாருங்க.. அடடடடடா 

பழைய மாருதி கார்ல ஒட்டி பழகுங்க. அதை ஒட்டிடிங்கனா எல்லா வண்டியும் ஓட்டிடலாம் 

பவர் ஸ்டீரிங் வண்டில ஒட்டி பழகாதீங்க.

புது வண்டில ஒட்டி பழகாதீங்க.

செருப்பு போட்டுகிட்டு ஒட்டி பழகாதீங்க.
இது தான் ரொம்ப முக்கியம் 

அது தான் ரொம்ப முக்கியம் 

இத பண்ணிடீங்கனா அப்புறம் மத்ததெல்லாம் சுலபம்.

கிளட்சையும்,  அச்செலேரடேரரியும் சேர்ந்த மாதிரி விடனும் (ராக்கெட் சயின்ஸ்னு  நெனப்பு )

"ஆளை விடுங்கடா சாமி. நான் காரே ஓட்டலடா" அப்படிங்கிற அளவுக்கு கொண்டு போயி விட்ருவாங்க.

ஊர்ல இவ்ளோ பேரு ஓட்டுறாங்க , நம்மால முடியாதான்னு வளைத்து வச்சி இருந்த நம்பிகைய டபாள்னு காலி பண்ணிடுவாங்க நம்மக்கள். என்னா டேலேண்டு 

சரிங்க...

கார் ஓட்டறதுக்கு நிஜமாவே எதாச்சும் தனி திறமை இருக்கணுமா. அப்போ தான் ஓட்ட முடியுமா?

சின்ன வயசுலேயே கத்துக்கிட்டு இருந்து இருக்கணுமா? 

கத்துக்கிட்டு நானாவே கார் ஓட்டிக்கிட்டு போறதுக்கு எவ்ளோ நாள் ஆகும்?

முடியுமா முடியாதா ?

கத்துகுவேனா மாட்டேனா ?

வருமா வராதா?

......................

சொல்றேன் கேளுங்க ..

நிஜம்மா சொல்றேன். கார் ஓட்டற மாதிரி ஒரு சொகுசான வேலை வேற எதுவும் இருக்காது.

முதல் விஷயம், டூ வீலர் மாதிரி காரை பாலன்ஸ் பண்ண தேவை இல்லை.

இப்ப தொடப்பம் இருக்கா. அதை கைல புடிசிக்கிட்டு நாமதான் லேப்ட்டுகும் ரைட்டுகும் ஆட்டிக்கிட்டு வேலை பன்னுவோம். அதுவே மிசீன் வச்சி கிளீன் பண்ணும் போது என்ன பன்னுவோம். அப்படியே மிசீன புடிச்சு நகதிடே போவோம் சுலபமா. அந்த மாதிரி தான் கார் ஒட்டுறதும். (விளக்கம் சொன்னா அனுபவிக்கணும். ஆராய கூடாது)

நல்லா யோசிச்சு பாருங்க. சைக்கிள் கத்துகிரவங்க எப்பிடி கத்துபாங்கனு.

ஒருத்தர் சைடுல நின்னுகிட்டு புடிச்சிகிட்டே வருவாரு. உக்காந்து இருக்கிறவங்க பண்ணுவாங்க பாருங்க அலப்பறை.....
புடிச்சிட்டு வரவங்க மேலஅப்பிடியே சைக்கிளோட சாஞ்சிப்பாங்க. ரெண்டு வெயிட்டயும் சொல்லி தரவர் தாங்கி புடிச்சிட்டு வருவாரு. நான் மொதல்ல சொன்ன விஷயத்தை யோசிச்சு பாருங்க. கார் கத்துக்கும் போது இந்த பிரச்சனையே வராது.

கார் கத்துக்கும் போது எந்த ஒரு நிலமைலையும் கீழ விழ மாட்டோம். அடி எதுவும் படாது.

நல்லா யோசிச்சு பாருங்க. சைக்கிள் கத்துகிரவங்க எப்பிடி எல்லாம் விழுந்து வாரி இருப்பாங்கனு.

அப்பிடி தான், அவ்ளோவே தான்னு சொல்லி வண்டிய புடிச்சி சொல்லி கொடுத்துட்டு இருந்தவரு கைய விட்ருவாரு. அப்பிடியே சைக்கிள் கொஞ்சம் கொஞ்சமா தூரம் போய்கிட்டே போய்கிட்டே ......கிட்ட பொய் பார்த்தா, தரைல உக்காந்து இருந்த வயத்து பிள்ளதாச்சி கஷ்ட பட்டு எந்திரிக்கிற மாதிரி கீழ விழுந்த நம்ம ஆளு, யம்மா , அம்ம்மானு எந்திரிச்சிட்டு இருப்பாங்க. இன்னும் புரிலையா. அட கீழ விழுந்துட்டாங்க பா.

இந்த மாதிரி பிரச்னையும் கார் ஓட்ட கற்றுக்கும் போது வராது. 

அப்புறம் என்னங்க. இந்த ரெண்டும் இல்லைனாலே முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி தான் போங்க.

நீங்க கத்துக்கும் போது தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் தான். அது இந்த கியர் போடுறது, பிரேக் போடுறது, கிளட்ச் போடுறது.

வேற என்ன.

கார் டிரைவர் சீட்ல ஹாயா உக்கார போறீங்க, ஸ்டீரிங்க புடிக்க போறீங்க, வண்டிய ஓட்ட போறீங்க. 


ரைட் ரைட்.....


Tuesday, September 13, 2011

My experience in AGS Cinemas, OMR

என்னத்த சொல்றது. பார்கிங் வரைக்கும் எல்லாம் ஓகே தான். கவுன்ட்டர்ல ஒருத்தர் தூங்கி வழிஞ்சிகிட்டு இருந்தார். நோட் பணிகோங்க. இரவு காட்சிக்கு கவுன்ட்டர்ல இருந்தது ஒருத்தர் மட்டும் தான். டிக்கெட் எடுத்துட்டு உள்ள போகும் போது இரவு மணி 9 : 10 . படம் 9 : 30 .  பார்க்க போனா படம் மங்காத்தா.

நல்ல பசி. கான்டீன்ல ஏகப்பட்ட மெனு டிஸ்ப்ளேல ஓடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரம் அதை எல்லாம் பாத்துட்டு ஒரு மெனு ஓகே பண்ணிட்டு போய் கேட்டா "அதெல்லாம் இல்ல சார்னு பதில் வருது. அங்க இருந்தது கோக் மற்றும் பாப் கார்ன். வாங்கிட்டு "ஸ்க்ரீன் 4 " டோர் பக்கதுல போய் நின்னுகிடோம். கான்டீன்ல யாரோ பாப் கார்ன்' மொத்தத்தையும் கீழ கொட்டி இருகாங்க. சுத்தம் செய்ய ஆள் இல்ல. ஆள் ஆளுக்கு அதை மெதிச்சிட்டு போய்ட்டு இருகாங்க. அங்க வேலை செய்றவங்க ஒருத்தரும் கண்டுகல.

சரி கொஞ்ச நேரம் வாங்கினத நொறுக்கலாம்னு எடுத்தா பாப் கார்ன் ல ஒரே உப்பு. வாய்ல வெக்க முடில. கோக் குடிச்சா பச்சை தண்ணி மாதிரி இருக்கு.
 
இது இப்பிடி இருக்க, படம் ஆரம்பிக்க இன்னும் 5  நிமிஷம் தான் இருக்கு. இன்னும் ஏன் டோர் ஓபன் பண்ணலேனு  கான்டீன்ல கேட்டேன். ஒருத்தர் தப தப னு ஓடினாரு. மறந்துட்டாங்க சார், இப்ப ஓபன் பண்ணிடுவாங்கனு  வந்து சொன்னாரு. எப்பிடி இருக்கு பாத்தீங்களா.

டிக்கெட்ட கொடுத்துட்டு உள்ள போனா ஒரு லைட் இல்ல. நிறைய பேரு விழுது வாரிக்கிட்டு உள்ள போய் சீட் ல உக்காந்தாங்க. சீட் நம்பர் லைட் தரைல வச்சி இருபாங்க ல . அது ஒன்னொன்னும் ஒரு ஒரு எடத்துல உருண்டு விழுந்து இருக்கு. ஒரு லைட் சீட் அடில போய் கெடக்குது. இன்னொரு லைட் தலை கீழ கெடக்குது. ஒரு லைட் எறியவே இல்ல.

படம் ஸ்டார்ட் ஆய்டுச்சு. 20  நிமிஷம் கழிச்சாயா லைட் ஆப் பண்ணுவீங்க.
இதுல சவுண்ட் சிஸ்டம் அதுக்கு மேல. சவுண்ட் எக்கோ ஆகுது. அதாங்க எதிரொலிக்குது.

இடைவேளைல போய் எதாச்சும் சாப்பிடலாம்னு போனா, அப்போ தான் கவனிக்கிறேன், கோக் கப் ல ஏற்கனவே புடிச்சி புடிச்சி மொத்தமா வச்சி இருக்காங்க. டைம் மிச்சம் பண்றாங்களாம். புடிச்சி வைச்சதை குடிச்சா எப்பிடிங்க நல்லா இருக்கும்.

எதுவுமே இல்ல. veg  sandwitch  தான் இருக்குனு சொன்னாங்கனு அதை வாங்கிட்டு உள்ள வந்தா, ஒரே புளிப்பு. காலை'ல செஞ்சது போல. ஒழுங்கா refregriate  பண்ணி இருக்க மாட்டாங்க போல.

இப்பிடி போச்சு என்னோட மங்காத்தா கதை .

Thursday, August 18, 2011

இதற்கு என்ன தமிழில் -1

 ஒரு மூக்கு கண்ணாடி கடையின் பெயர் பலகையில் "Vision world" என்பதற்கு தமிழில் "பார்வை உலகம்" என்று எழுதபட்டு இருந்தது. இதற்க்கு சரியான தமிழாக்கம் என்னவாக இருக்கும்?



Tuesday, May 17, 2011

பேரு சொல்லமாட்டேன்

விரட்டு விரட்டுன்னு விரட்டுறாங்க அந்த திருடனை...

அவன் கெட்ட நேரம் முட்டு சந்து உள்ள ஓடி போய் மாட்டிகிட்டான்.

புடிச்சு கும்மு கும்மு கும்மிட்டாங்க நம்ம மக்கு திருடனை.

ஸ்டேஷன் ல வச்சி செம விசாரணை.

உயர் அதிகாரி உள்ள வந்து திருடன் கிட்ட அவன பத்தி விசாரிக்கிறாரு.

எந்த ஊரு டா நீ... உன் பேரு என்ன.

வீரப்பா நம்ம அதிகாரி மூஞ்சிய பாத்துகிட்டே நிக்குறான் திருடன்.

ஊரு மதுரை. பேரு சொல்லமட்டேங்க.

ஊரு மதுரை ஆனா பேர சொல்ல மாட்டியா. என்ன நக்கலா. மரியாதையா மதுரைல எங்கனு சொல்லிடு.

ஏங்க. என் ஊரே மதுரை தாங்க. மதுரைல தாங்க வீடு.

அப்புறம் எதுக்கு டா சொல்ல மாட்டேன்னு சொன்னே.


ஊரு மதுரை. பேரு தாங்க சொல்லமாட்டேன்னு சொன்னேன்.  அதுக்கு ஏங்க  இப்பிடி கோவப்படறீங்க.

அதான் ஊரு மதுரைன்னு சொல்லிட்டியே அப்புறம் என்னடா சொல்லமாட்டேன்னு வேற சொல்ற. நீ என்ன லூசா. மதுரைன்னு சொல்லிடு சொல்ல மாட்டேன்னு சொல்றே. இருக்கு ஆனா இல்லன்னு சொல்வாங்களே அந்த மாதிரி நக்கல் காட்றியா என்கிட்ட. பிச்சு புடுவேன் பிச்சு.

யோவ் அதிகாரி. நீதான்யா லூசு. உன்னோட பேரையா சொல்லமாட்டேன்னு சொன்னேன். என்னோட பேர தானேயா சொல்லமாட்டேன்னு சொன்னேன்.

அப்போ உன்னோட பேர என்னனு கேட்டா சொல்ல மாட்டேன்னு சொல்வே. அப்பிடி தானே.

ஆமா.

லட்டில ரெண்டு வெச்சா சொல்வே. இந்தா வாங்கிக்கோ. வலிக்குதா.
வலிக்குதுல. இப்ப சொல்லு.

உன்னோட ஊரு என்ன

மதுரை

பேரு என்ன . பேரு எனாஆஆஆஆஆஆஅ

எவ்ளோ அடிச்சாலும் சொல்லமாட்டேன்னு தான் சொல்வேன்.



டமால் டமால் டமால் டமால். வலிக்குதா. இப்ப சொல்லு. பேரு என்ன

அந்த ஆண்டவனே வந்து கேட்டாலும் என் பேர சொல்லமாட்டேன்னு தான் சொல்வேன். உங்களுக்காக மாத்தி எல்லாம் சொல்ல மாட்டேன்.

இந்த அதிகாரி பத்தாதா. உன்ன அந்த ஆண்டவன் வேற வந்து கேக்கணுமா. நெனப்புதாண்டா உனக்கு.

உங்கிட்ட இருந்து உண்மைய எப்பிடி வாங்குறேன் பாரு.

அந்த போட்டோல இருக்கிறது யாரு.

காந்தி.

இந்த கண்ணாடில பாரு. இந்த கண்ணாடில தெரிறது யாரு.

அட அது நான் தாங்க .

அது  தெரிது. அந்த போட்டோல இருக்கிறது காந்தினு சொன்னே. இப்ப இந்த கண்ணாடில இருகிறவன் பேர சொல்லு.

வேணாங்க.

பரவால்ல சொல்லு.

இல்லீங்க வேணாம். நான் சொல்வேன் அப்புறம் நீங்க அடிப்பீங்க.

நமக்குள்ள என்ன . சும்மா சொல்லுங்க.

அப்புறம் அடிப்பீங்க.

அடிக்கமாட்டேன். சொல்லு. அந்த கண்ணாடில இருகிறவன் பேரு என்ன .

ஹிஹிஹிஹி சொல்லமாட்டேன்.

டமால் டமால் டமால் டமால்


ஐயோ யம்மா யம்மா . இதுக்கு தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

நீ செரிபட்டு வரமாட்டே. கான்ஸ்டபில். இவன் பேரு என்னனு சொல்ற வரைக்கும் வெளிய விடாதீங்க, லாக்கப்ல வச்சி மிதீங்க.

சார், விடிய போகுது. கேஸ் எதுவும் கிடைக்கலன்னு தான் இவன விரட்டி புடிச்சிட்டு வந்தோம். இப்ப என்ன பண்ணலாம் சார்.

சரி சரி.அவன் பேரு, விலாசத்த வாங்கிக்கிட்டு அவன விரட்டி விடு.

ஐயையோ சார். பேரு என்னனு கேட்டு தான் இவ்ளோ ரகளையே. மறுபடியும் பேர கேக்க சொல்றீங்களே.

யோவ் தெரியும் யா. நான் கேட்டா சொல்ல மாட்டேங்கிறான்னு தான் உன்ன விட்டு கேக்க சொல்றேன். போய் கேளு.

செர்ரிங்க சார்

டேய். உன்ன ஐயா போக சொல்லிடாரு. அந்த பேப்பர்ல உன் பேரையும் விலாசத்தையும் எழுதி கொடுத்திட்டு கிளம்பு.

செரிங்க

இந்த பேப்பர். அங்க உன்னோட பேர எழுது. அதுக்கு கீழ விலாசத்த எழுது.

நன் ஒன்னு கேக்கலாமா

என்ன சொல்லு.

பேருன்னு கேட்டு இருக்கிற எடத்துல, சொல்ல மாட்டேன்னு எழுதினா கோச்சிக்க மாட்டீங்களே.......................

டமால் டமால் டமால் டமால்

சார் இங்க பாருங்க என்ன எழுதி இருக்குன்னு.

என்ன கொடுமை கான்ஸ்டபில் இது. அவனோட டிரைவிங் லைசென்ஸ்ல  பேரு இருக்க வேண்டிய எடத்துல சொல்லமாட்டேன்னு எழுதி இருக்கு. அவன் பேரே "சொல்லமாட்டேன்" தானா... என்ன கொடும நாராயணா. அவ்வ்வவ்வ்வ்.