இப்ப கார் ஓட்ட கத்துக்கணும்னு பிளான் போட்டாச்சு. அடுத்ததா மனசுல ஓட ஆரம்பிக்கிற விஷயம் ...
நம்மனால முடியுமா
ரெண்டு சக்கர வண்டி நா சின்னது, பூந்து பூந்து போய்டலாம். நாலு சக்கர வண்டி நா அளவுல பெருசு. பெப்பரகேனு இருக்கும்.
இவ்ளோ நெரிசல்ல எப்பிடி ஒட்டிட்டு போறது.
ஸ்டீரிங்க புடிக்கணும்,
கியர போடணும்,
அச்செலேரடேற மிதிக்கணும்,
பிரேக்க போடணும்,
கிளட்ச போடணும்,
யப்பா யப்பா. இவ்ளோ கஷ்டபட்டு இத ஒட்டி தொலையனுமானு தோணும்.
இந்த குழப்பத்துல டிப்ஸ் கேக்கலாம்னு அக்கம் பக்கம் கேட்டா அவங்க எடுத்து விடுவாங்க பாருங்க.. அடடடடடா
பழைய மாருதி கார்ல ஒட்டி பழகுங்க. அதை ஒட்டிடிங்கனா எல்லா வண்டியும் ஓட்டிடலாம்
பவர் ஸ்டீரிங் வண்டில ஒட்டி பழகாதீங்க.
புது வண்டில ஒட்டி பழகாதீங்க.
செருப்பு போட்டுகிட்டு ஒட்டி பழகாதீங்க.
இது தான் ரொம்ப முக்கியம்
அது தான் ரொம்ப முக்கியம்
இத பண்ணிடீங்கனா அப்புறம் மத்ததெல்லாம் சுலபம்.
கிளட்சையும், அச்செலேரடேரரியும் சேர்ந்த மாதிரி விடனும் (ராக்கெட் சயின்ஸ்னு நெனப்பு )
"ஆளை விடுங்கடா சாமி. நான் காரே ஓட்டலடா" அப்படிங்கிற அளவுக்கு கொண்டு போயி விட்ருவாங்க.
ஊர்ல இவ்ளோ பேரு ஓட்டுறாங்க , நம்மால முடியாதான்னு வளைத்து வச்சி இருந்த நம்பிகைய டபாள்னு காலி பண்ணிடுவாங்க நம்மக்கள். என்னா டேலேண்டு
ஊர்ல இவ்ளோ பேரு ஓட்டுறாங்க , நம்மால முடியாதான்னு வளைத்து வச்சி இருந்த நம்பிகைய டபாள்னு காலி பண்ணிடுவாங்க நம்மக்கள். என்னா டேலேண்டு
சரிங்க...
கார் ஓட்டறதுக்கு நிஜமாவே எதாச்சும் தனி திறமை இருக்கணுமா. அப்போ தான் ஓட்ட முடியுமா?
சின்ன வயசுலேயே கத்துக்கிட்டு இருந்து இருக்கணுமா?
கத்துக்கிட்டு நானாவே கார் ஓட்டிக்கிட்டு போறதுக்கு எவ்ளோ நாள் ஆகும்?
முடியுமா முடியாதா ?
கத்துகுவேனா மாட்டேனா ?
வருமா வராதா?
......................
சொல்றேன் கேளுங்க ..
நிஜம்மா சொல்றேன். கார் ஓட்டற மாதிரி ஒரு சொகுசான வேலை வேற எதுவும் இருக்காது.
முதல் விஷயம், டூ வீலர் மாதிரி காரை பாலன்ஸ் பண்ண தேவை இல்லை.
இப்ப தொடப்பம் இருக்கா. அதை கைல புடிசிக்கிட்டு நாமதான் லேப்ட்டுகும் ரைட்டுகும் ஆட்டிக்கிட்டு வேலை பன்னுவோம். அதுவே மிசீன் வச்சி கிளீன் பண்ணும் போது என்ன பன்னுவோம். அப்படியே மிசீன புடிச்சு நகதிடே போவோம் சுலபமா. அந்த மாதிரி தான் கார் ஒட்டுறதும். (விளக்கம் சொன்னா அனுபவிக்கணும். ஆராய கூடாது)
நல்லா யோசிச்சு பாருங்க. சைக்கிள் கத்துகிரவங்க எப்பிடி கத்துபாங்கனு.
ஒருத்தர் சைடுல நின்னுகிட்டு புடிச்சிகிட்டே வருவாரு. உக்காந்து இருக்கிறவங்க பண்ணுவாங்க பாருங்க அலப்பறை.....
புடிச்சிட்டு வரவங்க மேலஅப்பிடியே சைக்கிளோட சாஞ்சிப்பாங்க. ரெண்டு வெயிட்டயும் சொல்லி தரவர் தாங்கி புடிச்சிட்டு வருவாரு. நான் மொதல்ல சொன்ன விஷயத்தை யோசிச்சு பாருங்க. கார் கத்துக்கும் போது இந்த பிரச்சனையே வராது.
கார் கத்துக்கும் போது எந்த ஒரு நிலமைலையும் கீழ விழ மாட்டோம். அடி எதுவும் படாது.
நல்லா யோசிச்சு பாருங்க. சைக்கிள் கத்துகிரவங்க எப்பிடி எல்லாம் விழுந்து வாரி இருப்பாங்கனு.
அப்பிடி தான், அவ்ளோவே தான்னு சொல்லி வண்டிய புடிச்சி சொல்லி கொடுத்துட்டு இருந்தவரு கைய விட்ருவாரு. அப்பிடியே சைக்கிள் கொஞ்சம் கொஞ்சமா தூரம் போய்கிட்டே போய்கிட்டே ......கிட்ட பொய் பார்த்தா, தரைல உக்காந்து இருந்த வயத்து பிள்ளதாச்சி கஷ்ட பட்டு எந்திரிக்கிற மாதிரி கீழ விழுந்த நம்ம ஆளு, யம்மா , அம்ம்மானு எந்திரிச்சிட்டு இருப்பாங்க. இன்னும் புரிலையா. அட கீழ விழுந்துட்டாங்க பா.
இந்த மாதிரி பிரச்னையும் கார் ஓட்ட கற்றுக்கும் போது வராது.
அப்புறம் என்னங்க. இந்த ரெண்டும் இல்லைனாலே முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி தான் போங்க.
நீங்க கத்துக்கும் போது தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் தான். அது இந்த கியர் போடுறது, பிரேக் போடுறது, கிளட்ச் போடுறது.
வேற என்ன.
கார் டிரைவர் சீட்ல ஹாயா உக்கார போறீங்க, ஸ்டீரிங்க புடிக்க போறீங்க, வண்டிய ஓட்ட போறீங்க.
ரைட் ரைட்.....
No comments:
Post a Comment