Tuesday, May 17, 2011

பேரு சொல்லமாட்டேன்

விரட்டு விரட்டுன்னு விரட்டுறாங்க அந்த திருடனை...

அவன் கெட்ட நேரம் முட்டு சந்து உள்ள ஓடி போய் மாட்டிகிட்டான்.

புடிச்சு கும்மு கும்மு கும்மிட்டாங்க நம்ம மக்கு திருடனை.

ஸ்டேஷன் ல வச்சி செம விசாரணை.

உயர் அதிகாரி உள்ள வந்து திருடன் கிட்ட அவன பத்தி விசாரிக்கிறாரு.

எந்த ஊரு டா நீ... உன் பேரு என்ன.

வீரப்பா நம்ம அதிகாரி மூஞ்சிய பாத்துகிட்டே நிக்குறான் திருடன்.

ஊரு மதுரை. பேரு சொல்லமட்டேங்க.

ஊரு மதுரை ஆனா பேர சொல்ல மாட்டியா. என்ன நக்கலா. மரியாதையா மதுரைல எங்கனு சொல்லிடு.

ஏங்க. என் ஊரே மதுரை தாங்க. மதுரைல தாங்க வீடு.

அப்புறம் எதுக்கு டா சொல்ல மாட்டேன்னு சொன்னே.


ஊரு மதுரை. பேரு தாங்க சொல்லமாட்டேன்னு சொன்னேன்.  அதுக்கு ஏங்க  இப்பிடி கோவப்படறீங்க.

அதான் ஊரு மதுரைன்னு சொல்லிட்டியே அப்புறம் என்னடா சொல்லமாட்டேன்னு வேற சொல்ற. நீ என்ன லூசா. மதுரைன்னு சொல்லிடு சொல்ல மாட்டேன்னு சொல்றே. இருக்கு ஆனா இல்லன்னு சொல்வாங்களே அந்த மாதிரி நக்கல் காட்றியா என்கிட்ட. பிச்சு புடுவேன் பிச்சு.

யோவ் அதிகாரி. நீதான்யா லூசு. உன்னோட பேரையா சொல்லமாட்டேன்னு சொன்னேன். என்னோட பேர தானேயா சொல்லமாட்டேன்னு சொன்னேன்.

அப்போ உன்னோட பேர என்னனு கேட்டா சொல்ல மாட்டேன்னு சொல்வே. அப்பிடி தானே.

ஆமா.

லட்டில ரெண்டு வெச்சா சொல்வே. இந்தா வாங்கிக்கோ. வலிக்குதா.
வலிக்குதுல. இப்ப சொல்லு.

உன்னோட ஊரு என்ன

மதுரை

பேரு என்ன . பேரு எனாஆஆஆஆஆஆஅ

எவ்ளோ அடிச்சாலும் சொல்லமாட்டேன்னு தான் சொல்வேன்.



டமால் டமால் டமால் டமால். வலிக்குதா. இப்ப சொல்லு. பேரு என்ன

அந்த ஆண்டவனே வந்து கேட்டாலும் என் பேர சொல்லமாட்டேன்னு தான் சொல்வேன். உங்களுக்காக மாத்தி எல்லாம் சொல்ல மாட்டேன்.

இந்த அதிகாரி பத்தாதா. உன்ன அந்த ஆண்டவன் வேற வந்து கேக்கணுமா. நெனப்புதாண்டா உனக்கு.

உங்கிட்ட இருந்து உண்மைய எப்பிடி வாங்குறேன் பாரு.

அந்த போட்டோல இருக்கிறது யாரு.

காந்தி.

இந்த கண்ணாடில பாரு. இந்த கண்ணாடில தெரிறது யாரு.

அட அது நான் தாங்க .

அது  தெரிது. அந்த போட்டோல இருக்கிறது காந்தினு சொன்னே. இப்ப இந்த கண்ணாடில இருகிறவன் பேர சொல்லு.

வேணாங்க.

பரவால்ல சொல்லு.

இல்லீங்க வேணாம். நான் சொல்வேன் அப்புறம் நீங்க அடிப்பீங்க.

நமக்குள்ள என்ன . சும்மா சொல்லுங்க.

அப்புறம் அடிப்பீங்க.

அடிக்கமாட்டேன். சொல்லு. அந்த கண்ணாடில இருகிறவன் பேரு என்ன .

ஹிஹிஹிஹி சொல்லமாட்டேன்.

டமால் டமால் டமால் டமால்


ஐயோ யம்மா யம்மா . இதுக்கு தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

நீ செரிபட்டு வரமாட்டே. கான்ஸ்டபில். இவன் பேரு என்னனு சொல்ற வரைக்கும் வெளிய விடாதீங்க, லாக்கப்ல வச்சி மிதீங்க.

சார், விடிய போகுது. கேஸ் எதுவும் கிடைக்கலன்னு தான் இவன விரட்டி புடிச்சிட்டு வந்தோம். இப்ப என்ன பண்ணலாம் சார்.

சரி சரி.அவன் பேரு, விலாசத்த வாங்கிக்கிட்டு அவன விரட்டி விடு.

ஐயையோ சார். பேரு என்னனு கேட்டு தான் இவ்ளோ ரகளையே. மறுபடியும் பேர கேக்க சொல்றீங்களே.

யோவ் தெரியும் யா. நான் கேட்டா சொல்ல மாட்டேங்கிறான்னு தான் உன்ன விட்டு கேக்க சொல்றேன். போய் கேளு.

செர்ரிங்க சார்

டேய். உன்ன ஐயா போக சொல்லிடாரு. அந்த பேப்பர்ல உன் பேரையும் விலாசத்தையும் எழுதி கொடுத்திட்டு கிளம்பு.

செரிங்க

இந்த பேப்பர். அங்க உன்னோட பேர எழுது. அதுக்கு கீழ விலாசத்த எழுது.

நன் ஒன்னு கேக்கலாமா

என்ன சொல்லு.

பேருன்னு கேட்டு இருக்கிற எடத்துல, சொல்ல மாட்டேன்னு எழுதினா கோச்சிக்க மாட்டீங்களே.......................

டமால் டமால் டமால் டமால்

சார் இங்க பாருங்க என்ன எழுதி இருக்குன்னு.

என்ன கொடுமை கான்ஸ்டபில் இது. அவனோட டிரைவிங் லைசென்ஸ்ல  பேரு இருக்க வேண்டிய எடத்துல சொல்லமாட்டேன்னு எழுதி இருக்கு. அவன் பேரே "சொல்லமாட்டேன்" தானா... என்ன கொடும நாராயணா. அவ்வ்வவ்வ்வ்.